மது குடிக்க பணம் தராத மனைவி மிரட்டுவதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக நாடகம் ஆடியவர் தீயில் கருகி சாவு

Spread the love

மது குடிக்க பணம் தராத மனைவி மிரட்டுவதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக நாடகம் ஆடியவர் தீயில் கருகி சாவு.

 

 

கோவை நவம்பர் 29-

 

 

 

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்கோனாவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 43). எஸ்டேட் தொழிலாளி. இவரது மனைவி மாதவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் தினசரி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார்.

 

 

 

அப்போது மனைவியிடம் அடிக்கடி தற்கொலை செய்து கொ ள்வேன் என கூறி மிரட்டி வந்தார்.சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் மது குடிப்பதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

 

 

 

இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் மனைவியை மிரட்டுவத ற்காக வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

 

 

 

இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பாலகிருஷ்ணனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைக்க ப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன ளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

 

 

 

இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மது குடித்த இளம் பெண் கணவருக்கு தெரியாமல் இருக்க பெட்ரோலை குடித்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை.
Next post வாடகை அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்,கோவை மலர் வியாபாரிகள் கோரிக்கை…