பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அளேபுரம் அரசு பள்ளி மாணவ- மாணவியர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அளேபுரம் அரசு பள்ளி மாணவ- மாணவியர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். மஞ்சள்
தர்மபுரி செப் 4,
தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது .
இதில் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இந்தபோட்டியில் அளேபுரம் அரசு பள்ளி மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர், இதில் 14 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் கபடி போட்டியில் முதலிடம் பெற்றனர், வாலிபால் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர்.மேலும் பல்வேறு தடகளப் போட்டியான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் முதலிடமும்,3000 மீட்டர் ஓட்ட போட்டியில் இரண்டாம் இடமும்,100 மீட்டர் ஓட்ட போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றனர்.குண்டெறிதல் மற்றும் வட்டெறிதல் ,ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றனர்,இந்த வெற்றியின் மூலம் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு அளேபுரம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தகுதி பெற்றனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவியர்களை
பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமது அலி, உதவி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன் பட்டதாரி ஆசிரியர்கள் சொக்கலிங்கம், இளையராசா உள்ளிட்ட பள்ளியின் இருபால் ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கோவிந்தராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றி பதக்கங்களை வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.