பி .ஏ.பி பாசனப்பகுதிகளுக்கு பயிர்கள் கால்நடைகளுக்காக திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட பாசன விவசாயிகள் கோரிக்கை

Spread the love

பி .ஏ.பி பாசனப்பகுதிகளுக்கு பயிர்கள் கால்நடைகளுக்காக திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட பாசன விவசாயிகள் கோரிக்கை

தாராபுரம் செப்-5 பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழுவின் கலந்தாய்வு கூட்டம் திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமையில் தலைமை பொறியாளர் பாண்டி முன்னிலையில் நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட தொகுப்பனைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் இருப்பு மற்றும் எதிர்பார்ப்பு நீர் வரத்து ஆகியவைகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளதை கருத்தில் கொண்டு எதிர்வரும் 20 ஆம் தேதி முதல் நான்காம் மண்டல பாசனத்திற்கு நிலுவையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவும் தொகுப்பனைகளில் ஒன்றான திருமூர்த்தி அணையில் இருந்து உயிர் தண்ணீராக ஒரு சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் இதனுடைய மழை பெய்து கூடுதலாக தண்ணீர் வந்தால் அதற்கேற்ப கூடுதல் சுற்றுத் தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனைத் தொடர்ந்து எதிர்வரும் முதல் மண்டல பாசனத்திற்கும் நான்காம் மண்டல பாசனத்திற்கும் தண்ணீர் வழங்கியது போலவே தண்ணீர் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது

நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் திட்ட குழு உறுப்பினர்கள் அருண், நித்தியானந்தம் ,நல்லதம்பி, குருசாமி, தெய்வசிகாமணி, ஈஸ்வரமூர்த்தி, பாலசுப்பிரமணியன், சடைய பாளையம் ஈஸ்வரன், மகேந்திரன் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு வடிநிலக்கோட்டசெயற்பொறியாளர்கள் பொள்ளாச்சி மற்றும் திருமூர்த்தி அணை கோட்டம் உடுமலை கோட்டம் ஆகியவற்றிலிருந்தும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அளேபுரம் அரசு பள்ளி மாணவ- மாணவியர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
Next post தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் துணிகர கொள்ளை சம்பவங்களை நடத்திய முகமூடி கும்பலின் தலைவன் கைது தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை