தகார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் அமைச்சர் தகவல். 

Spread the love

தகார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் அமைச்சர் தகவல்.

சென்னை நவம்பர் 30-

 

தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் 05/12/2022 மற்றும் 06/12/2022 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.

 

 

இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in ,http://www.tnstc.in, மற்றும் tnstc official app, ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை 9445014426, திருநெல்வேலி 9445014428, நாகர்கோவில் 9445014432, தூத்துக்குடி 9445014430, கோயம்புத்தூர் 9445014435, தலைமையகம் 9445014435, 9445014424 மற்றும் 9445014416, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

 

 

எனவே, திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஊட்டி தாவரவியல் பூங்காவில் தேனீக்கள் கொட்டி கேரள மாணவர்கள் 11 பேர் காயம்.
Next post கோவையில் சட்டசபை குழு ஆய்வு 10 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.