சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமையில் நடந்தது

Spread the love

சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமையில் நடந்தது

சென்னை செப் 13,

சென்னை வடக்கு திமுக அணிகளின் அமைப்பாளர்கள் அறிமுகம் ஆலோசனை கூட்டம் ராயபுரம் அறிவகத்தில் நடைபெற்றது . இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்,சென்னை பெருநகர மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் இளைய அருணா தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் வெற்றிவீரன், நாடாளுமன்ற உறுப்பினர் மரு.கலாநிதிவீரசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் மூர்த்தி,ஆர்.டி.சேகர்,எபினேசர் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். இக்கூட்டத்தில் சென்னை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள்,பகுதி கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் செப் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது குறித்து சிறப்பு ஆலோசனை நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சென்னை வடக்கு கழக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் லயன் தீனதயாளன் உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – மாவட்ட செயலாளர் இளைய அருணா அறிவிப்பு 
Next post கோவையில். களை கட்டும் கோ க்ளாம் விற்பனை கண்காட்சி