கோவை சாப்ட்வேர் இன்ஜினியரிடம் வெளிநாட்டு சுற்றுலா கம்பெனி பெயரில் 32.23 லட்சம் மோசடி,

Spread the love

கோவை சாப்ட்வேர் இன்ஜினியரிடம் வெளிநாட்டு சுற்றுலா கம்பெனி பெயரில் 32.23 லட்சம் மோசடி,

 

கோவை டிசம்பர் 1

 

கோவை போத்தனூர் அருகே உள்ள சிட்கோவை சேர்ந்தவர் ரவிசங்கர்(வயது39). இவர் தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

 

 

 

கடந்த 23-ந் தேதி இவரது டெலகிராம் செயலிக்கு அமெரிக்க சுற்றுலா நிறுவனமான கயாக் என்ற பெயரில் ஒரு லிங்க் வந்தது. அந்த லிங்கில் உள்ள செல்போன் எண்ணுக்கு ரவிசங்கர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசிய நபர் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து, எங்கள் நிறுவனம் குறித்து மதிப்பு மிக்க கருத்துக்களை பதிவிட்டால் உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினர்

 

 

 

இதனை உண்மை என நம்பிய ரவிசங்கர், அந்தநபர் கூறிய வங்கி கணக்கிற்கு வெவ்வேறு காலகட்டங்களில் ரூ.32 லட்சத்து 23 ஆயிரத்து 909 பணத்தை அனுப்பினார். ஆனால் பணம் அனுப்பி நீண்ட நாட்கள் ஆகியும் எந்த ஒரு லாபமும் ரவிசங்கருக்கு வரவில்லை.

 

 

 

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல அமெரிக்க சுற்றுலா நிறுவனம் பெயரில் மோசடி செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சூலூரில் திமுக கவுன்சிலர் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு.
Next post காரமடை நகராட்சியில்தெரு விளக்கு குடிநீர் குழாய் வாங்கியதில் முறைகேடு பாஜக கவுன்சிலர் குற்றச்சாட்டு.