மினி பஸ் சேவையை மீட்டெடுக்க அரசாங்கம் தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிச்சாமி கோரிக்கை.

Spread the love

முன்னாள் முதல்வர் கலைஞர் விவசாயிகளுக்கு தந்து சென்ற மினி பஸ் சேவையை மீட்டெடுக்க அரசாங்கம் தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிச்சாமி கோரிக்கை.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி, அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இயங்கி வந்த மினி பஸ் சேவை முன்னாள் முதல்வர் கலைஞரால் துவங்கப்பட்டது. இந்த பேருந்துகள் தமிழகத்தின் அனைத்து கிராமப்புறங்களிலும் சென்று விவசாயிகள், கிராமப்புற ஏழை மக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. 6000 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 800 குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிகிறது. கோவை மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இருந்த நிலையில் 20க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. ஆட்சிகளும் காட்சிகளும் மாறினாலும் மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் ஓடாமல் மினி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு புதர் மண்டி கிடைக்கிறது என்பதை கண்கூடாக பார்த்தோம். டீசல் விலை உயர்வு,ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதால் பேருந்துகளை இயக்குவது இல்லை என்று மினி பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் தேர்தலில் வெற்றி பெற்று வந்தால் இந்த பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம் என்று கூறினார்கள். இது நாள் வரையிலும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிராமப்புறத்தில் உள்ள விவசாய பெருமக்களுக்கு மிகவும் உதவியாக இருந்த இந்த பேருந்துகளை மீண்டும் இயக்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கேஸ் விலை குறைத்ததை கூட தேர்தலுக்காக தான் என்று நாங்கள் கருதுகிறோம். தேர்தலுக்காக இதனை அறிவித்து விட்டு தேர்தலுக்கு பின் விலையை ஏற்றினால் அது வருத்தத்திற்குரிய விஷயமாக அமையும். கோவையில் சூலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மினி பேருந்துகளை இயக்க வேண்டும்.

மகாராட்டிரா மாநில விவசாயிகள் போராட்ட்ம் குறித்து பேசிய அவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வது, தீக்குளிப்பது போன்றவற்றை விவசாயிகள் கையில் எடுக்காமல் வேறு விதத்தில் போராட்டத்தை நெஞ்சு நிமிர்த்தி நடத்த வேண்டும். மாடியில் இருந்து குதிப்பது போன்றவை எல்லாம் விவசாயிகள் கோபத்தை காட்டுகிறார்களே தவிர அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து தீர்வு காண வேண்டும் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதை விவசாயிகள் இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post திருப்பூரில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் தலைமையில் நடந்தது
Next post மக்கள் குறைகளை கேட்டறிந்த தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன்