கோவையில். களை கட்டும் கோ க்ளாம் விற்பனை கண்காட்சி

Spread the love

கோவையில். களை கட்டும் கோ க்ளாம் விற்பனை கண்காட்சி

கோவை செப் 15,

கோவை ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் கோ கிளாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,வீட்டு அலங்கார பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி துவங்கியது.

. கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற , பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே புதிய அனுபவத்தை தரும் வகையில் கோ க்ளாம் விற்பனை கண்காட்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது..ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் ஒருங்கிணைப்பில் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள கோ க்ளாம் ஷாப்பிங் கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் துவங்கியது. இதன் துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக,,சப்னா மகிஜா நாக்பால்,நீத்து பெராஷர்,புவனா சதீஷ்,ஹேமலட்சுமி,ஜரீனா,ராதாஷா ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.. செப்டம்பர் 15,16,17 என மூன்று நாட்கள் நடைபெற உள்ள,இந்த விற்பனை கண்காட்சியில்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,வீட்டு அலங்கார பொருட்கள், என ஐம்பதிற்கும் மேற்பட்டஅரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன..கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹீனா ராகுல்,கண்காட்சி குறித்து பேசுகையில், இங்கு ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ,பெண்களுக்கான சாரீஸ்,சுடிதார், அலங்கார ஆபரணங்கள்,குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள், பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஹேண்ட் பேக்குகள்,பிரத்யேக டிசைனில் உருவாக்கப்பட்ட காலணிகள் பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல்,வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ,வட இந்திய மாநிலங்களில் பிரபலமான பெண்களுக்கான புது டிசைன் ஆடைகள்,அணிகலண்கள் ஆகிய அனைத்தும் ஒரே கூரையின் கோ க்ளாம் விற்பனை கண்காட்சி உள்ளதாக அவர் தெரிவித்தார்..சனி ஞாயிறு என விடுமுறை நாட்களில் நடைபெற உள்ள இதில் கோவை,திருப்பூர்,ஈரோடு,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வது குறிப்பிடதக்கது…

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமையில் நடந்தது
Next post அமைச்சர் முத்துசாமிக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சங்கத்தின் தேசிய துணை தலைவர் லயன் செந்தில்குமார் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.