அங்கன்வாடி மைய கட்டிடத்தை சரி செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
அங்கன்வாடி மைய கட்டிடத்தை சரி செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
நெல்லை டிச – 01
நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஒன்றிய பகுதிக்குட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் ஊராட்சி திணையுரணையில் அரசு பள்ளியின் அருகில் 2014-15 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் ராமகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சேர்மதுரையிடம் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எஸ் சுடலைகண்ணு, நெல்லை மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை,ஊராட்சி ஒன்றிய துணைப்பெருந்தலைவர் இசக்கிபாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் சேர்மதுரை உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு பொது மக்களின் ஏதாவது ஒரு நல்ல பயன்பாட்டிற்கு உடனடியாக மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து அந்த கட்டிடத்தை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தனர்.இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நாங்குநேரி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ்டார்வின்,செயற்குழு உறுப்பினர் மாயகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி சங்கர், திணையூரணி கிளைச்செயலாளர் சுதாகர் ஒன்றியபேச்சாளர் பொன் ஆர்.கே,சிறுபான்மைஅணி எட்வர்ட், சுற்றுச்சூழல் அணி வெள்ளை பாண்டி, மாணவரணி சுரேஷ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்