புதுக்கோட்டை அருகே பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் ஆலங் குடி வாலிபர் கைது.

Spread the love

புதுக்கோட்டை அருகே பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் ஆலங் குடி வாலிபர் கைது.

 

புதுக்கோட்டை டிச.1.

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பல்லாவராயன் பத்தையைச்சேர்ந்த திருச்செல்வம் இவரது மனைவி பழனியம்மாள் (வயது 35)இவரை கடந்த 23ஆம் தேதி முதல் காணவில்லை என அவ ரது தந்தை கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்திருந்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல்போன பெண் ணை தேடி வந்தனர்.

 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனியம்மாள் அப்பகுதியில் உள்ள தைலம் மரக்கட்டில் அழுகிய நிலையில் சகல மாக மீட்க்கப்பட்டார்.கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவி னர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் பேச்சுவார்த்தை நடத் தியதில் மறியல் கைவிடப்பட்டது.

 

இந்நிலையில் இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் ஆலங்குடி டிஎ ஸ்பி தீபக்ரஜினி தலைமையில் தனிப்படை அமைத்துகொலை செய் தவனை தேடியும் விசாரணையும் செய்து வந்தனர்.

 

இந்நிலையில் பெண்ணை கொலை செய்த ஆலங்குடி அருகே உள் ள வெண்ணாவல்குடி. கொத்தக்கோட்டை குடியிருப்பை சேர்ந்த பா ண்டியடியராஜ் (வயது 19 )இவர் பழனியம்மாளிடம் நான்கு நாட்கள் தொடர்ந் செல்போனில் பேசியது தெரிய வந்தது இதை தொடர்ந்து அவரை கறம்பக்குடி போலீஸ் அளைத்து வந்து விசா ரணை நடத்தி னர்.

 

இதில் அவர் தனது நண்பர் மூலம் செல்போன் நம்பர் பெற்று பழனிய ம்மாள் இடம் பேசி வந்ததாகவும் கடந்து 23ஆம் தேதி தைலம் மரக்கட் டில் இரவு நேரத்தில் பழனியம்மாளை கீழே தள்ளியதில் அவர் இறந் து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் பாண்டியராஜை கைது செய்த போலீசார் அவரை ஆ லங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்திடு சிறையில் அடைத்தன ர்.நான்கு குழந்தைகளின் தாயான பழனியம்மாளை கொன்ற வழக் கில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் கறம்பக்குடி பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவையில் சட்டசபை குழு ஆய்வு 10 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.
Next post அங்கன்வாடி மைய கட்டிடத்தை சரி செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை