நாட்டறாம்பள்ளி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்தை துவக்கி வைத்த ஜோலார்பேட்டை எம்எல்ஏ

Spread the love

நாட்டறாம்பள்ளி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்தை துவக்கி வைத்த ஜோலார்பேட்டை எம்எல்ஏ.

திருப்பத்தூர் மாவட்டம்
நாட்டறாம்பள்ளி கிழக்கு ஒன்றியம்,
மல்லகுண்டா ஊராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நாட்றம்பள்ளி பேருந்து நிலையம் முதல் கோயாண் கொல்லை, மல்லகுண்டா, தாசிரியப்பனூர் வழியாக குருபவானி குண்டா வரை செல்ல புதிய பேருந்து இயக்க கோரிய கோரிக்கையை ஏற்று ஜோலார்பேட்டை எம்எல்ஏவும்,திமுக மாவட்ட செயலாளர் தேவராஜி புதிய பேருந்தை மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்ததுடன், பேருந்தை இயக்கி மக்களுடன் பயணித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் நாட்டறாம்பள்ளி கிழக்கு  ஒன்றிய செயலாளர் டி.சாமுடி,
பொதுக்குழு உறுப்பினர் சாம்மண்ணன், நாட்டறாம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவேலன், நாட்டறாம்பள்ளி ஒன்றிய குழுத் துணை தலைவர் தேவராஜி, ஒன்றிய செயலாளர் முரளி,
ஊராட்சிமன்ற தலைவர் சதிஷ்குமார்,
ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தன்,
மஞ்சுளா, முனிசாமி, சிவராஜ், சரவணன், சின்னன்னன், கோபால், அகிலன், வினோத் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், நிர்வாகிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மக்னா யானை தொடர் அட்டகாசம்-150″க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது
Next post கோவையில் புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்-ன் 3ம் சுற்று நடைபெறுகிறது!