அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் பேராசியர்களுக்கு பத

Spread the love

சென்னை:

அரசு மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றிய 6 பேராசிரியர்களுக்கு மருத்துவ கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனராக இருந்த கே.நாராயணசாமி செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி முதல்வராகவும், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனர் திருப்பதி கடலூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் ராஜாஸ்ரீ திண்டுக்கல் மருத்துவ கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றனர்.

திருச்சி மருத்துவ கல்லூரி பேராசிரியர் சிவக்குமார், தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வராகவும், பெரம்பலூர் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தேனி மருத்துவ கல்லூரிக்கும், தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புதுக்கோட்டை அருகே ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்.
Next post உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாணவ,மாணவிகளுக்கு தனித்திறன் மேம்பாட்டு போட்டி