ஊட்டியில் பா.ஜ.க சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்.

Spread the love

ஊட்டியில் பா.ஜ.க சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்.

கோவை அக்டோபர் 3-

மகாத்மா காந்தி ஜெயந்தி விழா உதகை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிக சிறப்பாக நடைபெற்றது காந்திஜெயந்தியை முன்னிட்டு,

ஊட்டி சேரிஙகிராஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கதர் துணியின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் காதிகிராப்ட் சென்று நிர்வாகிகள் அனைவருக்கும்,

காதி துணி வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து தூய்மை பாரதம் திட்டம் மூலம் நகரின் பல பகுதிகளில் தூய்மை பணிகளை, மாவட்டத் தலைவர் மோகன் ராஜ் தொடங்கி வைத்தார்.

இதில் மண்டல் தலைவர் பிரவீன்,பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், ராஜேந்திரன், கார்த்திக், துணைத்தலைவர்கள் சுதாகர், ஹரி கிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் பிரேமி யோகன், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அனிதா கிருஷ்ணன் ,

மாவட்ட கூட்டுறவு துறை செயலாளர் விசாலி, மாவட்ட முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் கண்ணன், நகர செயலாளர் ராகேஷ். தடவியல் துறை மாவட்டத் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஊட்டி கேத்தியில் காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்
Next post ஊட்டி பந்தலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை மீட்பு.