ஊட்டி பந்தலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை மீட்பு.

Spread the love

ஊட்டி பந்தலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை மீட்பு.

கோவை அக்டோபர் 3-

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா சேரம்பாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அத்திச்சால் பகுதியில் உள்ள தனியாா் காபி தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிருக்குப் போராடி வருவதாக வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேரம்பாடி வன ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனா். ஆனால், சிறுத்தை ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்ததால் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்டனா்.

பின்னா், காயமடைந்த சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுருக்கு கம்பி வைத்த தோட்ட உரிமையாளா் மாத்யூ (69) தலைமறைவானதால், உடனிருந்த அவரது உறவினா் அனீஷ் (39) என்பவரை வனத் துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஊட்டியில் பா.ஜ.க சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்.
Next post ஊட்டி கேத்தி பேரூராட்சியில் நூலகம் திறப்பு