தமிழகத்தில் காற்றாலை அமைத்து மின்சார உற்ப்பத்தி ஒன்றிய அரசு மந்திரி அறிவிப்பு

Spread the love

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை பகுதியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை அமைத்துள்ளது . இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காற்றாலையை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை மந்திரி பகவந்த் கூபா இன்று பார்வையிட்டார்.

அந்த நிறுவன அதிகாரிகளிடம் காற்றாலையின் செயல்பாடு, உற்பத்தி செலவு உள்ளிட்ட விபரங்களை அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய கடலோரப் பகுதிகளில் 70 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது. குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் 35 ஜிகாவாட் அளவிற்கு காற்று வளம் உள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இரண்டு காற்றாலைகளை அமைக்க உள்ளோம். இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சார விநியோகிக்க முடியும்.

எதிர்காலத்தில் 7 மெகாவட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதற்குப் போதுமான அளவு வாய்ப்பும், வளமும் இந்தியாவில் உள்ளது. சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும் , பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தமிழக அரசு மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
Next post நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500/- வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்