விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப்பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

Spread the love

விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப்பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தகவல்.

விவசாயிகள் குறைதீh¦க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம்,தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியா¦ அலுவலகத்தில் இன்று (23.09.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தொ¨வித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர்அவா¦கள் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.90 மி.மீ ஆகும். இயல்பாக செப்டம்பர் மாதம் முடிய பெய்ய வேண்டிய அளவு 627.4 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு 22.09.2022 வரை 786.80 மி.மீ மழை பெய்துள்ளது. இயல்பைக் காட்டிலும் நடப்பண்டில் கூடுதலாக மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் 2022 வரை 104807.2 எக்டர் பரப்பில் நெல், சோளம், கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் வேளாண் பயிh¦கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறையால் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் நெல் 240 மெட்h¨க் டன்னும், சிறு தானியங்கள் 96 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 428 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 307 மெட்ரிக் டன்னும் மற்றும் பருத்தி 2 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்திட இலக்கு நிh¦ணயம் செய்யப்பட்டு, தேவையான அளவிலான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வேளாண்மைத் துறை சாh¦ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று, அவா¦களின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்து நிலை அலுவலா¦களும் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப்பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்,தெரிவித்தார்.
முன்னதாக மீன்வளத்துறை சார்பில் விவசாயத்திற்கு ஏற்ற நன்னீர் மீன்வகைகள் தொடர்பாக கருத்து கண்காட்சியினை பார்வையிட்டார்கள். மேலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் சார்ந்த இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .கார்மேகம், பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, இணை இயக்குநர்(வேளாண்மை) திரு.க.கணேசன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் புருஷோத்தமன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தமிழ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்வமணி உட்பட தொடர்புடைய அலுவலா¦கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா¦.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மக்கள் ஆரோக்கியத் திட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்கள்.
Next post புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் டிப்பர் லாரி மோதி முதியவர் பலியான சம்பவத்தில் தப்பியோடிய டிரைவர் கைது.