வாணியம்பாடியில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த கோரி பொது மக்கள் சாலை மறியல்

Spread the love

வாணியம்பாடியில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த கோரி பொது மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் புதிதாக செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில்

செல்போன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சினால்
குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகளும், முதியோர்களும் உடல் மற்றும் மனதளவில் பாதிப்புகள் ஏற்படும் அபயாம் உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் முதல் நகராட்சி அதிகாரிகள் வரை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்து வாணியம்பாடி – ஆலங்காயம் சாலையில் அப்பகுதி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெருமாள்பேட்டை கூட்டுச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

அதேபோல் வாணியம்பாடி பெரிய பேட்டை அம்பாலால் நகர் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு குடியிருப்புக்கு இடையே பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்து செல்போன் டவர் அமைக்கும் பணி இடத்திற்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பழனி நகராட்சியில் நடைபெற்ற, நகரமன்ற கூட்டத்தில், சிற்றுண்டி வழங்கிய தமிழக முதல்வருக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Next post திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்தில் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்