இலக்கியபட்டி ஊராட்சி கிராம சபைகூட்டம் நடைபெற்றது

Spread the love

” தருமபுரி ஊராட்சி ஒன்றியம் இலக்கியம் பட்டி ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் ”

அக்.3 தருமபுரி மாவட்டம் தருமபுரி ஊராட்சி ஒன்றியம்
இலக்கியம்பட்டி ஊராட்சியின் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அம்மா பூங்காவில் ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ் அவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது. துணைத்தலைவர். நித்யா வெங்கடேசன் முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலாளர் சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தருமபுரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் பொறியாளர்.துரைசாமி கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை .மற்றும் நூலஹள்ளி சுகாதார செவிலியர்.கல்பனா, மற்றும் ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள். சி.சீனிவாசன்.என்.புவனேஷ்வரி நாகராஜன்.எஸ்.தமிழரசிசேகர்‌.எஸ்.சுமதிசெல்வம். டி.சித்ராதேவேந்திரன்.டி.வென்மதிதமழ்.பி.அசோக்குமார்.ஜி.விஜயகுமார்.கே.காமராஜ்.எஸ்.தீபாமணி.எஸ்.கங்காதரன்.ஜி.இளங்கோவன்.எஸ்.ஜெயலட்சுமிசெந்தில்.ஜே.புகழ்மணிஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் பற்றி கிராம சபை கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தீபாவளி போனஸ் மற்றும் ஊதிய உயர்வு வழங்க கோரி கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு.
Next post நாளை ஆயுத பூஜை விழா கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.