தாராபுரம் அருகே ஒருவர் தூக்கிட்டு தற்கொலை கொலையா தற்கொலையா போலீசார் விசாரணை

Spread the love

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பொள்ளாச்சி சாலையில் உள்ள பஞ்சப்பட்டி என்ற கிராமத்தில் பழனி மனைவி மீனாட்சி அவர்களின் மகன் சுப்பிரமணி வயது 34 இவர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து சூர்யா வயது (12) கார்த்தி வயது (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பாக வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அப்போது உறவினர்கள் எல்லா இடங்களிலும் தேடியும் இவர் கிடைக்காமல் இருந்த இந்த நிலையில் நேற்று அதே கிராமத்தில் அருகே உள்ள சின்னக்கரை ஓடை என்ற இடத்தில் மரத்தில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தார். அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு விரோதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.மேலும் இந்த சம்பவம் குறித்து கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post திமுக மாவட்ட செயலாளருக்கும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
Next post திருப்பூர் தாராபுரத்தில் மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.