ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் சமூக ஆர்வலர் சிவசங்கர் தனி வட்டாட்சியர் நந்தகோபால் சந்திப்பு

Spread the love

ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் சமூக ஆர்வலர் சிவசங்கர் தனி வட்டாட்சியர் நந்தகோபால் சந்திப்பு

தாராபுரம் செப் 11,

தாராபுரம் காங்கேயம் கோட்டத்திற்கு உட்பட்ட தனி வட்டாட்சியர் நந்தகோபால் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினரும்,சமூக ஆர்வலருமான சிவசங்கர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.அப்போது ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசு வழங்கக்கூடிய நலத்திட்ட உதவிகளான இலவச வீட்டுமனை பட்டா,திராவிட மாடல் ஆட்சியில் தமிழக முதல்வர் முக.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த இல்லம் தேடி கல்வி,வீடு தேடி மருத்துவம், ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை,தாட்கோ மூலம் கடன் உதவி பெற்று ஆதி திராவிடர் மக்களை தொழில் முனைவோராக மாற்றுவது,தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டம் பெறுவது,முதல் பட்டதாரி வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறுதல் குறித்தும், அடிப்படை வசதிகளான சாலை,குடிநீர்,பாதாள சாக்கடை அமைத்தால், பேருந்து இல்லாத கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகள் பெறுவது குறித்த முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.விரைவில் அரசால் வழங்கப்படும் சான்றுதல்கள் பிறப்பு,இறப்பு சான்றுதல,ஜாதி சான்றுதல் மற்றும் வீட்டு வரி செலுத்தல் போன்றவற்றை நடைமுறை சிக்கல்கள் இருந்து வருவதாகவும் இந்த சான்றுதல்கள் தடையின்றி உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வட்டாட்சியர் நத்தகோபாலிடம் கோரிக்கைகளை வலியுறுத்தினார் சமூக ஆர்வலர் சிவசங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்து வரும் இஸ்லாமியர்கள்
Next post முதல்வர் சந்திக்க நேரம் ஒதுக்கா விடில் தொடர் வேலை நிறுத்தம் தொழில் துறையினர் பேட்டி