தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி மலர் தூவி மரியாதை.
தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பாப்பாரபட்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி மலர் தூவி மரியாதை.
விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் 139 வது பிறந்த நாளான இன்று தருமபுரி மாவட்டம் பாப்பாரபட்டியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுபாட்டில் உள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆதனை தொடர்ந்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, கே.பி.அன்பழகன், வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, சம்பத்குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அங்குள்ள அவரது நினைவிடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அந்த வளாகத்தில் உள்ள பாரத மாதா ஆலயத்தில்; உள்ள பாரத மாதாவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் பொது மக்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.