துப்பாக்கியுடன் வனப்பகுதியில் மூவர் உலா – வனத்துறையினர் அதிரடி

Spread the love

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து (27). இவர் தமிழ்நாடு – கர்நாடகா எல்லை பகுதிகளான ஒகேனக்கல் மற்றும் ஆலம்பாடி துறை, செங்காப்பட்டி பகுதிகளில் நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர் கன் (AlR GUN) ஆகியவற்றை வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்துள்ளார்.அவரோடு சேர்ந்து அவரது நண்பர்களான நல்லாம்பட்டியை சேர்ந்த கவின் குமார் MBBS (27) மற்றும் விக்னேஷ் (25) ஆகியோரும் சேர்ந்து கர்நாடக மாநிலம் கோபி நத்தம் வனசகர பகுதிக்குள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு சுற்றி திரிந்துள்ளனர்.விலங்குகளை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த கேமரா, இவர்கள் சுற்றி திரிவதை புகைப்படம் எடுத்துள்ளது. அதனை வைத்து கர்நாடக மாநிலம் கோபி நத்தம் வனசரக அலுவலர்கள் ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியில் சேர்ந்த மாரிமுத்துவை நேற்று இரவு கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மறைத்து வைத்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஏர்கன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவருடன் இணைந்து வேட்டையாடிய அவரது நண்பர்களான கவின் குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோரை இன்று வனத்துறையினர் கைது செய்தனர்.அவர்களை கொள்ளேகால் வன அலுவலகத்திற்கு பரிசல் வழியாக ஆற்றை கடந்து அழைத்துச் சென்று அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை மாநகராட்சி ஒரே நாளில் ரூபாய் 3.12 கோடி வரி வசூல் செய்து சாதனை
Next post ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த குரங்கிற்கு அங்கிருந்த குடியிருப்புவாசிகள் சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.